ஆங்கில திறன் மேம்பாட்டு பயிற்சி


ஆங்கில திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் ஆங்கில திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும், எளிதல் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளவும் உதவும் சிறப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பில் 'கேம்பிரிட்ஜ் ஆப் ஸ்கில்' என்னும் பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையவழி பயிற்சி முகாமின் தொடக்க விழா ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்காக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தென் இந்தியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆங்கில அறிவுத்திறன் பயிற்சியின் வணிக மேம்பாட்டின் மேலாளர் சாமுவேல் ஆனந்தராஜ் கலந்து கொண்டு பேசினார். சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜூலா வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர் பென்னட் பயிற்சி முகாமின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார்.

இதில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

முடிவில், சிவந்தி அகாடமி, கேம்பிரிட்ஜ் ஆங்கில அறிவுத்திறன் பயிற்சிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் சிம்ஸ்டன் தங்கராஜ் நன்றி கூறினார்.


Next Story