தொடக்கப் பள்ளிகள் ஆசிரியர்களுக்கான ஆங்கில பேச்சு பயிற்சி


தொடக்கப் பள்ளிகள் ஆசிரியர்களுக்கான ஆங்கில பேச்சு பயிற்சி
x

தொடக்கப் பள்ளிகள் ஆசிரியர்களுக்கான ஆங்கில பேச்சு பயிற்சி நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் தாலுகாவில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி பேசுவதற்கான ஒரு நாள் பயிற்சி தணிகைப்போளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசிரியர் பயிற்றுநர் பொற்செல்வி, அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை எழிலரசி, மற்றும் ஜெயின் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் எப்படி பேச வேண்டும், அதை மாணவர்கள் மத்தியில் எப்படி கொண்டு சென்று சேர்ப்பது என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.


Next Story