அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி
x

துறையூரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி

துறையூரில் உள்ள வட்டார வள மையத்தின் சார்பில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது போல் விளக்கி தங்களது படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தினர். இப்பயிற்சியை துறையூர் வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின் ஆய்வு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை துறையூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் புகழேந்தி செய்திருந்தார். துறையூர் பகுதியில் உள்ள 235 ஆசிரியர்களுக்கு 9 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story