தொழிற்பழகுனர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்


தொழிற்பழகுனர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழிற்பழகுனர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழிற்பழகுனர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது

இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்

தேசிய தொழிற்பழகுனர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் மயிலாடுதுறை ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்கின்றனர்.

தொழிற்பழகுனர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ. பயிற்சி பெற்றவர்கள் தகுதி உடையவர்கள். மேலும் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு கல்வித்தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் பிரஷ் அப்ரடீஸ் ஆக சேர்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுனர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறலாம்.

உதவித் தொகை

இத்தொழிற்பழகுனர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7 ஆயிரம் முதல் நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணிபுரிந்திட பயனுள்ளதாக அமையும்.

இந்த அரிய வாய்ப்பினை மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்தவர்கள் பயன்படுத்தி கொண்டு பயன்பெறலாம். மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குனர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை. தொலைபேசி எண்: 04362-278222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story