செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை


செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை
x

விருதுநகர் சூலக்கரையில் உள்ள செவித்திறன் குறையுைடயோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

விருதுநகர்


விருதுநகர் சூலக்கரையில் உள்ள செவித்திறன் குறையுைடயோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

மாணவர் சேர்க்கை

விருதுநகர் சூலக்கரையில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

முன்பருவ பள்ளி முதல் பிளஸ்-2 வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. சமச்சீர் கல்வி போதிக்கப்படுகிறது. சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் பணி நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.

கல்வி உதவித்தொகை

கல்வித்துறை வழியாக கல்வி உபகரணங்கள் அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்படுகின்றன. ஆண், பெண் என இருபாலருக்கும் தனி, தனியாக காற்றோட்டம் உள்ள விடுதி வசதி உள்ளது.

உணவு, உறைவிடம் மற்றும் விடுதி மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. செவித்துணை கருவிகள் மாணவர்களுக்கு விலை இல்லாமல் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. தற்போது 2 மடங்காக உதவி தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

கணினி பயிற்சி

ஆண்டுதோறும் மாணவர்கள் இலவசமாக கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். இரண்டு கல்வி ஆய்வகத்தோடு மாணவர்களுக்கான கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 1 முதல் 11 -ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 11-ம் வகுப்பில் தமிழ், வணிகவியல், கணக்குப்பதிவியல், தணிக்கையியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. எனவே பெற்றோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி செவித்திறன் குறையுடைய தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story