வீடுபுகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு


வீடுபுகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாலாட்டின்புத்தூரில் வீடுபுகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் வி.பி. சிந்தன் நகரை சேர்ந்தவர் ராமசாமி. முட்டை வியாபாரி. நேற்று முன்தினம் இரவு ராமசாமி வியாபாரம் தொடர்பாக வெளியே சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி முத்துமாரி இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் தனித்தனியாக 2 பார்சல்களில் 5 முட்டைகளை கட்டித்தருமாறு கேட்டுள்ளார். முத்துமாரியும் முட்டைகளை பார்சல் கட்டி தந்துள்ளார். அப்போது அந்த நபர் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். முத்துமாரியும் தண்ணீர் எடுத்து வருவதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்தொடர்ந்து சென்ற அந்த மர்ம நபர் முத்துமாரியின் கழுத்தில் இருந்த 4 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடியுள்ளார். அதிர்ச்சி அடைந்த முத்துமாரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். அதற்குள் அந்த மர்ம நபர் இருளில் ஓடி தப்பிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.


Next Story