முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
x

திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி

செம்பட்டு,ஜூலை.2-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் நேற்று மாலை 5.25 மணி அளவில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. பகுதி செயலாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.35 மணி அளவில் கார் மூலம் கரூர் புறப்பட்டு சென்றார்.


Next Story