திருச்சி வந்த முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு


திருச்சி வந்த முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
x

திருச்சி வந்த முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி வந்த முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு

நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க.பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். அவரை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

பின்னர் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி ராம்ஜி நகரில் நடைபெற்ற மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்்கேற்றார். அப்போது தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் அரிஸ்டோ ரவுண்டான முதல் விழா நடைபெறும் ராம்ஜி நகர் வரை நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக அரிஸ்டோ பாலம் அருகே பொன்னகர் முதல் கேர் கல்லூரி வரை சாலையோரம் 14 இடங்களில் தி.மு.க. சார்பில் சிறிய அளவில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடைகளில் நாதஸ்வரம், டிரம்ஸ் உள்ளிட்ட இசை நிகழ்ச்சி, கரகாட்டம், உருமி, மயிலாட்டம், ஒயிலாட்டம் நடத்தி முதல்-அமைச்சரை வரவேற்றனர். மேலும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள், தி.மு.க.வினர் திரண்டு முதல்-அமைச்சரை வரவேற்றனர். 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்டர் மீடியன் மற்றும் இரு புறங்களிலும் தி.மு.க. கொடி கம்பங்கள், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பேனர் இல்லை

முதல்-அமைச்சரை வரவேற்று அரிஸ்டோ ரவுண்டானா முதல் ராம்ஜிநகர், கேர் கல்லூரி வரை சாலையோரங்களில் கொடிகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. பேனர்கள் வைக்கப்படவில்லை. கோரையாறு பாலம் மற்றும் கூட்டம் நடை பெறும் இடத்தின் நுழைவு வாயில் முன் மட்டும் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உதயநிதிக்கு கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி கூட்டம் நடத்த அறுவுறுத்தப்பட்டதால் இதில் தி.மு.க.வினர் கவனமுடன் செயல்பட்டனர்.

பங்கேற்றோர்

வரவேற்பு நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர்கள் கலைச்செல்வி சிவக்குமார்(முசிறி), செல்வராணி(துறையூர்), கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் எஸ்.துரைராஜ்(அந்தநல்லூர்), கே.கமலம் கருப்பையா(மணிகண்டம்), டி.ரவிச்சந்திரன்(லால்குடி), ஆர்.மாலா ராமச்சந்திரன் ( முசிறி), ஆர்.ஸ்ரீதர் (மண்ணச்சநல்லூர்), எம்.ஹேமலதா (உப்பிலியபுரம்), ஆர்.ரசியா கோல்டன் ராஜேந்திரன் (புள்ளம்பாடி), பி.ஷர்மிளா பிரபாகரன்(தா.பேட்டை), எம்.சரண்யா மோகன்தாஸ் (துறையூர்), எஸ்.கிருஷ்ணவேணி (தொட்டியம்) மற்றும் அந்தநல்லூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story