நெடுஞ்சாலைத்துறை சார்பில் கல்வராயன்மலை சுற்றுலா தலம் செல்லும் சாலையில் நுழைவு வாயில் அமைப்பு


நெடுஞ்சாலைத்துறை சார்பில்  கல்வராயன்மலை சுற்றுலா தலம் செல்லும் சாலையில் நுழைவு வாயில் அமைப்பு
x

நெடுஞ்சாலைத்துறை சார்பில் கல்வராயன்மலை சுற்றுலா தலம் செல்லும் சாலையில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன்மலை அமைந்துள்ளது. சுற்றுலா தலமான கல்வராயன்மலையில் பெரியார், கவியம், மேகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகளும், படகு குழாம் மற்றும் சிறுவர் பூங்கா போன்றவை உள்ளன. இதுதவிர 150-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களும் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் இங்கு கோடைவிழாவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஏழைகளின் சுற்றுலா தலமான கல்வராயன்மலைக்கு கள்ளக்குறிச்சி, சென்னை, திருச்சி, சேலம், புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பங்களுடன் வாரவிடுமுறை, கோடை விடுமுறை காலங்களில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து நீர்வீழ்ச்சிகளில் குளித்தும், படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள். இந்த நிலையில் கல்வராயன்மலை சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக கல்வராயன்மலை செல்லும் சாலையின் அடிவாரத்தில் உள்ள பரிகம் சோதனைச்சாவடி அருகே நுழைவு வாயில் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி பரிகம் சாலையில் ரூ.12 லட்சம் செலவில் கல்வராயன்மலை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் நுழைவுவாயில் அமைக்கப்பட்டது.


Next Story