வங்கிக்கடன் பெற தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்
பால் பதப்படுத்துதல், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள் அமைக்க வங்கிக்கடன் பெற ெதாழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பால் பதப்படுத்துதல், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள் அமைக்க வங்கிக்கடன் பெற ெதாழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பால் பதப்படுத்துதல்
மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில்முனைவோர், தனியார் மற்றும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புகூட்டுதல், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்புகூட்டுதல், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், இனமேம்பாட்டு தொழில் நுட்பம் மற்றும் இனபெருக்க பண்ணை, கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்து தயாரிக்கும் ஆலைகள், வேளாண் கழிவு மேலாண்மை ஆலைகள் அமைத்திடவும் விரிவாக்கம் செய்திடவும் வங்கிக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில்முனைவோர், தனியார் மற்றும் சிறுகுறுநடுத்தர நிறுவனங்கள் முறையான திட்ட மதிப்பீட்டுஅறிக்கையுடன் https://dahd.nic.in/schemes/programmes/ahidf அல்லது https://ahidf.udyamimitra.inஆகிய வலைதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியின் அடிப்படையில் மொத்த திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் வரை வங்கிக்கடன் வழங்கப்படும்.
பங்களிப்பு தொகை
இந்த திட்டத்தில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையானது சிறு குறு நடுத்தர நிறுவனங்களாக இருப்பின் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலும் இதர நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரையிலும் ஆகும். எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள நபர்கள் இதற்கான வலைதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தை 0452- 2530801, 9445001127 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.