தூத்துக்குடியில்தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடியில்தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத்தின் (துடிசியா) பொதுசெயலாளர் து.ராஜ்செல்வின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிறந்த தொழில் முனைவோர்களை கண்டறிய சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மற்றும் துடிசியா இணைந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை துடிசியா அரங்கத்தில் வைத்து தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை நடத்துகிறது. முகாமில் சுயதொழில் தொடங்கி விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு கட்டணம் கிடையாது.
முகாமில் முதல் கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்வது எப்படி, தொழில் தொடங்க இருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.