தொழில் முனைவோர் கருத்தரங்கம்


தொழில் முனைவோர் கருத்தரங்கம்
x

சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடந்தது

நாகப்பட்டினம்

நாகையை அடுத்த பாப்பாகோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஆனந்த் தலைமை தாங்கினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் கள ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கலந்துகொண்டு , வெற்றிகரமான தொழில் முனைவராக மாறுவது எப்படி என்பது பற்றியும், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அரசால் வழங்கப்படும் நிதி உதவி பற்றியும் பேசினார். கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார்.விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.முடிவில் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story