சுற்றுச்சூழல் தின பயிற்சி வகுப்பு
திருவைக்காவூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் தின பயிற்சி வகுப்பு நடந்தது.
தஞ்சாவூர்
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே உள்ள திருவைக்காவூர் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு ஊராட்சி தலைவர் பவுனம்மாள் பொன்னுசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் விஜயன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பிச்சை வரவேற்று பேசினார். தஞ்சாவூர் கால்நடை ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாக்டர் ஜெகதீசன் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளும், இதற்கு தீர்வு காண்பது குறித்தும் பேசினார். பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story