சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
கீரமங்கலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போதை பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மெய்நின்றநாதர் சுவாமி கோவில் வளாகத்திலிருந்து தொடங்கியது. மாரத்தான் ஓட்டத்தை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மரக்கன்றுகளை வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்களுக்கு 21 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 10 கி.மீ. தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 7 வயது முதல் 58 வயது வரை உடையவர்கள் முழுமையாக 21 கி.மீ தூரத்தை கடந்து வந்தனர். சுமார் 400 பேர் கலந்து கொண்ட மாரத்தானில் பெரம்பலூரை சேர்ந்த கலைச்செல்வன் என்ற மாற்றுத்திறனாளியும் கலந்து கொண்டார்.
Related Tags :
Next Story