சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்


சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாரக்குடி அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றிய அளவில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.தலைமை ஆசிரியர் சவுந்தர்ராஜன் வரவேற்று பேசினார்.

ஊராட்சி தலைவர் ராஜீவ்காந்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் முகமது யாசீன், வவ்வாலடி பள்ளியின் தலைமையாசிரியர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனா். தொடர்ந்து இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ ஆலோசகர் லியாக்கத் அலி, திருப்பயத்தங்குடி, ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் ஏசுநாதன் ஆகியோர் சுகாதாரம் தொடர்பாக பேசினர். .நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். முன்னதாக கொட்டாரக்குடி கிராமத்தை சுற்றிலும் 250 பனை விதைகள் விதைக்கப்பட்டன. முடிவில் பள்ளி ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.


Next Story