"22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடித்து உள்ளோம்":ஸ்டெர்லைட் நிறுவனம் அறிக்கை
“22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடித்து உள்ளோம்” என்று ஸ்டெர்லைட் நிறுவனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை 22 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த 22 ஆண்டுகளும் ஆலையின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. மேலும் வரையறை செய்யப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே ஆலையின் இயக்கம் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகள் இருந்து வந்துள்ளதை அது உறுதி செய்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையின் இயக்க உரிமையை தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து புதுப்பித்து வந்து உள்ளது. நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறுதி விசாரணைக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story