சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் வரவேற்றார். நகரசபை தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் பல்வேறு சேவை அமைப்பினர், தன்னார்வலர்கள், அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுற்றுச்சூழல் துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு நன்றி கூறினார்.


Next Story