தொழிலாளர் வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது


தொழிலாளர் வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 23 Jan 2023 12:45 AM IST (Updated: 23 Jan 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் தொழிலாளர் வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கூறி உள்ளார்.

நாகப்பட்டினம்

நாகையில் தொழிலாளர் வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் வைப்பு நிதி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு அதன் சேவைகள் எளிதாக கிடைக்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதி வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகங்களில் இ.பி.எப். சந்தாதாரர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வருங்கால வைப்பு நிதி தொடர்புடைய குறைகளை தீர்க்கும் சேவைகளை அதிகரிக்கும் வகையில் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் அருகிலேயே மிகவும் எளிதாக சேவைகள் கிடைக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மாதந்தோறும் 27-ந் தேதி 'நிதி ஆப்கே நிகத்' (நிதி தங்கள் அருகில்) எனும் இ.பி.எப். குறை நிவர்த்தி முகாம் நடத்துகிறது.

குறை தீர்க்கும் முகாம்

அதன்படி நாகை மாவட்ட சந்தாதாரர்களுக்கு குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இ.பி.எப். சந்தாதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள், ஓய்வூதிய பலன்கள் சரிவர கிடைக்கப்பெறாத ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற தொழில் நிறுவனங்களின் பி.எப். டிரஸ்டுகள் ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பி.எப். தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story