குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: ஈபிஎஸ் வதந்திகளை பரப்புகிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்


குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: ஈபிஎஸ் வதந்திகளை பரப்புகிறார் -  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
x

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் கவனக்குறைவு உறுதியானால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வதந்திகளை பரப்புகிறார். இதுபோன்ற வதந்திகளை பரப்புவது நல்லதல்ல. குழந்தை இறந்துவிட்டதாக வதந்தி பரப்புவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும்.

எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தையை பார்க்கச் செல்ல உள்ளேன்.குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் நாளை மாலைக்குள் அதற்கான அறிக்கை வரும். இது கவன குறைவால் ஏற்படவில்லை என எழும்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் தவறு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.உரிய விசாரணைக்குப் பின் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். குழந்தை விவகாரத்தில் கவனக்குறைவு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story