மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா


மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-15T00:16:57+05:30)

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா அலுவலர்கள் அபயாம்பிகை யானையிடம் ஆசி பெற்றனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, நகர சபை துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர சபை உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு நடத்தினர். சமத்துவ பொங்கலுக்கு வந்தவர்களை மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை தும்பிக்கையை உயர்த்தி வரவேற்றது. விழாவில் கலந்து கொண்டவர்கள் யானைக்கு மாலை அணிவித்து ஆசி பெற்றனர். தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து வழங்கப்பட்டன. விழாவில் நகராட்சி பொறியாளர் சனல்குமார், நகராட்சி மேலாளர் நந்தகுமார், தலைமை எழுத்தர் தினகரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story