வாய்மேடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா


வாய்மேடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
x

வாய்மேடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

நாகப்பட்டினம்

வாய்மேடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் மற்றும் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் அறிவழகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மகளிர் குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் கோலப்போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story