சமத்துவ பொங்கல் விழா


சமத்துவ பொங்கல் விழா
x

இளையான்குடியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி வடக்கு ஒன்றிய-பேரூர் தி.மு.க. சார்பில் செந்தமிழ் நகர், பொன்னியேந்தல், இளையான்குடி ஆகிய இடங்களில் கொடியேற்றி சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன், பேரூர் செயலாளர் பி.ஏ.நஜீமுதீன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தப்பாதை சாகுல், ஆரிப், சுப.தமிழரசன், அழகர், தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் கொடியேற்றி பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி காளிமுத்து, ஒன்றிய கழக நிர்வாகிகள் சாரதி (எ) சாருஹாசன், உதயசூரியன், தட்சிணாமூர்த்தி, ராஜேந்திரன், பெரியசாமி, முருகேசன், நகர் கழக நிர்வாகிகள் இப்ராஹிம், காதர் பாட்சா, பால் ரசாக், ரிஷி, இப்ராஹிம், காதர், ஜெயினுலாபுதீன், ரகூப், உமர் கத்தாப், பஞ்சவர்ணம், ராஜேஷ், கண்ணன் மற்றும் கிளை பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வண்ணார வயலில் சரவணன் தலைமையிலான புதிய சிந்தனை துளிகள் அமைப்பின் சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.


Related Tags :
Next Story