ஆலங்குடி கோர்ட்டில் சமத்துவ பொங்கல் விழா


ஆலங்குடி கோர்ட்டில் சமத்துவ பொங்கல் விழா
x

ஆலங்குடி கோர்ட்டில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி விஜயபாரதி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்கள், வழக்கறிஞர்கள், போலீசார், கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்துடனும், சகோதரத்துடனும் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.


Next Story