அங்கன்வாடி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா


அங்கன்வாடி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:15:49+05:30)

கே.வெங்கடேஸ்வரபும் அங்கன்வாடி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள கே.வெங்கடேஸ்வரபுரம் அங்கன்வாடி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

விழாவிற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜூன்னிசாபேகம் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி முன்னிலை வகித்தார். ஆசிரியர் முத்துசெல்வி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வெங்கடேஸ்வரபுரம் பஞ்சாயத்து தலைவர் திணேஷ்குமார் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிறுவர், சிறுமியர்களுக்கு பாட்டு போட்டி, நடன போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் சாரதாபாய், பஞ்சாயத்து துணை தலைவர் சவுந்தர்ராஜ், அங்கன்வாடி மைய மேற்பார்வையாளர் பாலசரஸ்வதி, உதவியாளர் செண்பகம் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story