போலீஸ் நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா
ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் போலீஸ் நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக போலீஸ் நிலையம் முன்பு வாழை தோரணம் கட்டி பொங்கல் பானை வைத்து வழிபாடு செய்தனர். இதில் ஆண் போலீசார் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையும், பெண் போலீசார் சேலையும் அணிந்து உறவினர்களுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஸ்வரன் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினார். இதில் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், எபினேசர் மற்றும் போலீசார் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் காவலர்கள் வேட்டி- சட்டை அணிந்தும், பெண் காவலர்கள் சேலை அணிந்தும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடினர்.