மும்மதத்தினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா
சீர்காழி போலீஸ் நிலையத்தில் மும்மதத்தினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா நடந்தது
மயிலாடுதுறை
சீர்காழி:
நாடு முழுவதும் தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் விவசாயம் செழிப்பதற்கும் தமிழர்களின் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த நிலையில் சீர்காழி போலீஸ் நிலையத்தில் உள்ள காவல் முனீஸ்வரன் கோவில் வளாகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் துணைபோலீஸ் சூப்பிரண்டு லாமேக் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது, இந்த விழாவில் மத வேறுபாடு இன்றி இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் முறைப்படி பிரார்த்தனை செய்தனர். விழாவில் மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் சீர்காழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story