மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி


மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
x

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி முதல் கடந்த 8-ந்தேதி வரை நடைபெற்ற 18 ஊராட்சி ஒன்றியங்கள் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளுடன் கூடிய மருத்துவ முகாமில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு உட்பட்ட 775 நபர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட 1,364 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 1,769 நபர்களுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையும், 1,847 நபர்களுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கான இணையதள பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் உதவி உபகரணங்களுக்காக கண்டறியப்பட்ட 282 நபர்களில் அலிம்கோ நிறுவனத்தினால் 120 நபர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்க அளவுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 950 மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் முருகேஷ் கலந்துகொண்டு முடநீக்கு சக்கர நாற்காலி 10 பேருக்கும், நடைபயிற்சி வண்டி 12 பேருக்கும், மூன்று சக்கர சைக்கிள் 4 பேருக்கும், காதொலிக்கருவி 34 பேருக்கும், ஊன்றுகோல் 15 பேருக்கும், கார்னர் சேர்கள் 5 பேருக்கும் என 80 பேருக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.

அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மி ராணி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கமணி மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story