அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள்


அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள்
x

குடியாத்தம், வேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வேலூர்

குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கே.எம்.ஜி. அரங்கத்தில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் குடியாத்தம் அரசு மருத்துவமனை, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு நோயாளிகளுக்குத் தேவையான சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள், படுக்கை வசதி கொண்ட தள்ளு வண்டிகள் ஆகிய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் பாபு தலைமை தாங்கினார். புலவர் வே.பதுமனார் முன்னிலை வகித்தார்.

கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரைஆற்றி, குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன்பாபு, வேலூர் மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் பல்லவன் ஆகியோரிடம், உபகரணங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story