அறிவியல் மற்றும் கணித உபகரண பொருட்கள் வழங்கும் விழா
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஸ்டெம் கருத்தாளர்களுக்கான அறிவியல் மற்றும் கணித உபகரண பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஸ்டெம் கருத்தாளர்களுக்கான அறிவியல் மற்றும் கணித உபகரண பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 ஸ்டெம் கருத்தாளர்களுக்கு அறிவியல் மற்றும் கணித உபகரண பொருட்களுக்கான வழங்கினார். ஸ்டெம் கருத்தாளர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரஹமத்து நிஷா, ஆரோக்கியசாமி, மாவட்ட கருத்தாளர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
ஸ்டெம் கருத்தாளர்களாக காளையார்கோவில் ஒன்றியத்தில் பாண்டிச்செல்வி, ஜெயப்பிரியா, சிவகங்கை ஒன்றியத்தில் லலிதா, மங்கையர்செல்வி, இளையான்குடி ஒன்றியத்தில் இருதய வில்சன், மானாமதுரை ஒன்றியத்தில் பிரின்சி தீபா, சித்ரா, திருப்புவனம் ஒன்றியத்தில் பிரியங்கா, எங்கள்ஸ், எஸ்.புதூர் ஒன்றியத்தில் வித்யா, சாக்கோட்டை ஒன்றியத்தில் ஜோதி, வரஉமாதேவி, கண்ணங்குடி ஒன்றியத்தில் சத்தியா, தேவகோட்டை ஒன்றியத்தில் வேணி சொர்ணதேவி, ஜாஸ்மின் சோபியா, கல்லல் ஒன்றியத்தில் பிரான்சிஸ் சோனியா, திருப்பத்தூர் ஒன்றியத்தில் செந்தாமரை செல்வி, தனலட்சுமி, சிங்கம்புணரி ஒன்றியத்தில் தனலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித ஆய்வு செயல்பாடுகளை செய்து காட்டி அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க உள்ளனர்.
இவர்களுக்கு மண்டல அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.