மண்டபம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உபகரண பொருள்கள்
மண்டபம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உபகரண பொருட்களை செயல் அலுவலர் இளவரசி வழங்கினார்.
ராமநாதபுரம்
பனைக்குளம்.
மண்டபம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்கும் அளவில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா அறிவுரைகளின் படி தூய்மை பணியாளர்கள் வெயில் நேரங்களில் அதிகமான பணிகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டி அவர்களது பணி நேரம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
மண்டபம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தொப்பி, கையுறைகள், குளிரூட்டப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் டி.ராஜா ஆலோசனைப்படி செயல் அலுவலர் இளவரசி கலந்துகொண்டு இந்த பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் நம்பு ராஜன், இளநிலை உதவியாளர் முனியசாமி, உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story