ரூ.10 லட்சம் மதிப்புள்ள சாராய ஊறல் அழிப்பு


ரூ.10 லட்சம் மதிப்புள்ள சாராய ஊறல் அழிப்பு
x

பேரணாம்பட்டு அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில், பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலையில் கங்காச்சரம், மாமரத்து பள்ளம், இலந்தை மரத்து ஏரி விளாங்காமரத்தடி, கொஞ்சான் குட்டை, அல்லேரி, டங்கா, பன்னிகுட்டி பள்ளம், நிம்மங்கானாறு, பால் சுனை, நீர் முள், லட்சுமி வெடி ஆகிய 12 இடங்களில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி ஆகியோர் தலைமையில், பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், குடியாத்தம் மது விலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், குப்பன் மற்றும் உள்ளூர் போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் என மொத்தம் 43 பேர் 4 குழுக்களாக சென்று நேற்று அதிகாலை முதல் மதியம் வரை அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது 37 பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் லிட்டர் ஊறல், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 27 அடுப்புகள் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். போலீசாரை கண்டவுடன் சாராய வியாபாரிகள் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடி தலைமறைவான 30-க்கும் மேற்பட்ட சாராய வியாபாரிகள் மீது பேரணாம்பட்டு போலீசார் மற்றும் குடியாத்தம் மது விலக்குப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story