தென்னை மரத்தில் விஷ வண்டுகள் அழிப்பு


தென்னை மரத்தில் விஷ வண்டுகள் அழிப்பு
x

தென்னை மரத்தில் விஷ வண்டுகள் அழிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே வேம்பனூரை சேர்ந்தவர் வேலாயுதம். இவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் உள்ள 2 தென்னை மரங்களில் விஷ வண்டு கூடு கட்டியிருந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதியினர் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீப்பந்தம் ஏற்றி 2 தென்னை மரங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story