ஏரல் அதிசயபுரம்புனித தோமையார் ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
ஏரல் அதிசயபுரம் புனித தோமையார் ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி
ஏரல்:
ஏரல் அதிசயபுரத்தில் மிகவும் பழமையான புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பழுதடைந்து உள்ளதால் புதிதாக கட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை முன்னிட்டு நேற்று நடந்த ஊர் திருவிழாவில் புதிய தோமையார் ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி ஆயர் இல்ல அருட்தந்தை ரஞ்சித் கர்டோசோ மற்றும் பழையகாயல் பங்குத்தந்தை வினிஸ்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அதிசயபுரம், ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதி இறை மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஏரல் பங்குத்தந்தை ரவீந்திரன் பர்னாந்து மற்றும் அதிசயபுரம் பரதர் ஊர் நல கமிட்டினர் செய்திருந்தனர். அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து சப்பர பவனி நிகழ்ச்சி நடந்தது.
Related Tags :
Next Story