எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயில் நிரந்தரமாக இயக்கப்படும்


எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயில் நிரந்தரமாக இயக்கப்படும்
x

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயில் நிரந்தரமாக இயக்கப்படும்

தஞ்சாவூர்

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயில் நிரந்தரமாக இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயில்

எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்தர சிறப்பு விரைவு ரெயில் கடந்த 4.6.2022 முதல் (வண்டி எண் 06035/06036) எர்ணாகுளத்தில் புறப்பட்டு வேளாங்கண்ணி வரை சென்று மீண்டும் எர்ணாகுளத்திற்கு வந்தடைந்து இயங்கி வருகிறது.

இந்த ரெயில் சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும். இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு மறுநாள் திங்கட் கிழமை நண்பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

வாரம் இருமுறை நிரந்தரமாக இயங்கும்

வாரம் ஒரு முறை மட்டும் இயங்கி வந்த இந்த சிறப்பு விரைவு ரெயிலை ரெயில்வே வாரியம் வாரம் இரு முறை நிரந்தரமாக இயங்கும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயில்(வண்டி எண் 16361) எர்ணாகுளத்தில் சனிக்கிழமை நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணியை வந்து அடையும்.

மீண்டும் இந்த விரைவு ரெயில் (வண்டி எண் 16362) வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடையும்.

மீண்டும் எர்ணாகுளத்தில் இருந்து திங்கட்கிழமை நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5. 50 மணிக்கு வேளாங்கண்ணியை வந்து அடையும். மீண்டும் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடையும்.

நின்று செல்லும் இடங்கள்

இந்த விரைவு ரெயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், காயங்குளம், கொல்லம், கொட்டாரக்காரா, புனலூர், செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விரைவு ரெயில் பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என திருச்சி கோட்ட ரெயில்வே உபயோகிப்போர் ஆலோசனை குழு உறுப்பினர்-பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் ஜெயராமன் திருச்சி கோட்ட ரெயில்


Next Story