ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x

ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். ஆண்டாள்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள அவரது குலதெய்வ கோவிலான வன பேச்சியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில், எனது அணி சார்பில் நிச்சயம் வேட்பாளர் நிறுத்தப்படுவார். நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவெடுத்து விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story