ஈரோடு மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது; பசுமாடு ஒன்று ரூ.65 ஆயிரத்துக்கு விற்பனை


ஈரோடு மாட்டுச்சந்தையில்  மாடுகள் வரத்து குறைந்தது;  பசுமாடு ஒன்று ரூ.65 ஆயிரத்துக்கு விற்பனை
x

ஈரோடு மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது. பசுமாடு ஒன்று ரூ.65 ஆயிரத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாராந்திர மாட்டுச்சந்தை வியாழக்கிழமைகளில் கூடுகிறது. இங்கு ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பசுமாடுகள், எருமை மற்றும் கன்றுக்குட்டிகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

நேற்று 200 பசுமாடுகள், 150 எருமை மாடுகள், 50 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இது வழக்கமாக வரும் எண்ணிக்கையை விட மிகவும் குறைவாகும். ஆனால் உள்ளூர் விவசாயிகளும், வியாபாரிகளும் நேற்று மாடு மற்றும் எருமைகளை நல்ல விலைக்கு வாங்கிச்சென்றனர். பசுமாடுகள் ரூ.30 ஆயிரத்தில் இருந்து விலை வைக்கப்பட்டன ஒரு பசு மாடு ரூ.65 ஆயிரத்துக்கு விலை போனது. இதுபோல் எருமை மாடுகளும் ரூ.30 ஆயிரத்தில் இருந்து விலை வைக்கப்பட்டன. அதிகபட்சமாக உரு எருமை மாடு ரூ.45 ஆயிரத்துக்கு விலைபோனது. கன்றுக்குட்டிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலை வைக்கப்பட்டன.

இதுபற்றி சந்தை நிர்வாகி கூறும்போது, 'தீபாவளி பண்டிகை முடிந்து விட்டதால் கேரளா, கர்நாடகா, ஆந்திர வியாபாரிகள் வரவில்லை. ஆனால், உள்ளூர் வியாபாரிகளின் வருகையால் 80 சதவீதம் மாடுகள் விற்பனையானது' என்றார்.


Next Story