ஈரோடு சத்திரோடுஎல்லை மாரியம்மன் கோவிலில் திருவிழாபூச்சாட்டுதலுடன் தொடங்கியது


ஈரோடு சத்திரோடுஎல்லை மாரியம்மன் கோவிலில் திருவிழாபூச்சாட்டுதலுடன் தொடங்கியது
x

திருவிழா

ஈரோடு

ஈரோடு சத்திரோட்டில் பிரசித்தி பெற்ற எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எல்லை மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கொண்டு வந்த மலர்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி இரவு அம்மனுக்கு கொலு வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று, எல்லை மாரியம்மன் கோவிலுக்கு வருவார்கள். பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 7-ந் தேதி இரவு 7 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மனின் திரு வீதிஉலா நடைபெறுகிறது. அன்று இரவு நடக்கும் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


Next Story