ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில்சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி நூதன ஆர்ப்பாட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினா்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மடியேந்தி நூதன ஆர்ப்பாட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீதா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக வழங்க வேண்டும். 2016-2017-ம் ஆண்டில் உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி கோஷங்களை எழுப்பினர்.