ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூடத்தில்கணித பாடம் நடத்திய சீன ஆசிரியர்


ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூடத்தில்கணித பாடம் நடத்திய சீன ஆசிரியர்
x

ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் சீன ஆசிரியர் கணித பாடம் நடத்தினாா்

ஈரோடு

ஈரோட்டை சேர்ந்தவர் ஆசிரியர் ஐசக் தேவகுமார். இவர் பல ஆண்டுகளாக சீனா நாட்டில் கணித ஆசிரியராக உள்ளார். அங்கு வேத கணித முறையில் பாடங்கள் எடுப்பதில் சிறந்து விளங்கும் அவர் 3 முறை சீன அரசின் சிறந்த வெளிநாட்டு ஆசிரியர்களுக்கான விருதினை பெற்று சாதனை படைத்து உள்ளார்.

இவர் விடுமுறைக்காக ஈரோடு வந்து இருக்கிறார். விடுமுறை தினத்தையும் பொழுதுபோக்குக்கு செலவிடாமல் மாணவ-மாணவிகளுக்கு வேத கணித முறையில் கணக்கு சூத்திரங்கள் கற்றுக்கொடுத்து வருகிறார். அதன்படி ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு வேத கணித பாடத்தை ஆசிரியர் ஐசக் தேவகுமார் கற்றுக்கொடுத்து, பயிற்சி அளித்தார். கணித விளையாட்டு, எளிய முறை வாய்ப்பாடுகளை அவர் குழந்தைகள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பித்தார். இவரை அருட்பா ஆராய்ச்சி மைய நிறுவனர் ஈரோடு கதிர்வேல் பாராட்டி பேசினார்.

முன்னதாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி வரவேற்றார். முடிவில் ஆசிரியை மல்லிகா நன்றி கூறினார்.


Next Story