ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதிசேலத்தில் கி.வீரமணி பேட்டி


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதிசேலத்தில் கி.வீரமணி பேட்டி
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சேலத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சேலம்


சேலம்,

கி.வீரமணி பேட்டி

சேலம் அஸ்தம்பட்டி பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

பெரியார் தொடங்கிய சேலம் சுயமரியாதை சங்க கட்டிடம் சாதி சங்கத்தினரால் சொந்தம் கொண்டாடப்பட்டது. அந்த கட்டிடம் பல ஆண்டுகளுக்கு பிறகு சட்டரீதியாக மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ெசன்னை ஐகோர்ட்டில் திராவிடர் கழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கடந்த 31-ந் தேதி வழங்கப்பட்டு உள்ளது. இனி அந்த கட்டிடத்தில் தான் பொதுமக்களுக்கான வாசகர் சாலை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தி.மு.க. கூட்டணி வெற்றி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, தனது நிலை தாண்டி முதல்-அமைச்சரை தரம் தாழ்ந்து பேசியுள்ளார். அவரது பேச்சு தி.மு.க. கூட்டணிக்கு பெரும் வெற்றியை தரும்.

பொதுவாக தேர்தல் நேரத்தில் கொள்கைகளையும், கருத்துக்களையும் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமே தவிர, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. வெற்றி தோல்வியை விட கட்சி உறுதியாக உள்ளதா? என்பதே முக்கியம்.

பா.ஜ.க.வின் கைங்கரியத்தால் அ.தி.மு.க. 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. தாய் கழகம் என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வினரை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டியது எங்களின் கடமை.

வட இந்தியர்கள் அதிகரிப்பு

தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படவில்லை. சி.பி.ஐ. அமலாக்கத்துறை மற்றும் தேர்தல் கமிஷன் ஆகியவற்றில் நியமன முறைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். டெல்லியில் ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழக மாணவர்களை தாக்கியது கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் வட இந்தியர்களின் வருகை அதிகரிப்பால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துவிட்டது. இதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கி.வீரமணி கூறினார்.





Next Story