ஈரோடு கிழக்கு தொகுதி - ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ராஜினாமா
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓ பன்னீர் செல்வம் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளார்.
ஈரோடு,
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ பன்னீர் செல்வம் தலைமையில் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் அணியினர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்பட 106 பேர் இன்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளனர்.
இதற்காக கடிதத்தை ஓ பன்னீர் செல்வத்துக்கு அவர்கள் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் பிரசாரம் செய்வாரா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தற்போது இவர்களின் ராஜினாமா என்பது ஓ பன்னீர் செல்வத்துக்கு மிகுந்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story