தேசிய பேட்மிண்டன் போட்டியில் ஈரோடு மாணவிகள் 4 பதக்கங்கள் வென்று சாதனை
தேசிய பேட்மிண்டன் போட்டியில் ஈரோடு மாணவிகள் ௪ பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா்.
இந்திய பேட்மிண்டன் சங்கம் சார்பில், தேசிய அளவிலான சப்-ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசை போட்டி சண்டிகர் மற்றும் லக்னோவில் நடந்தது. மேலும் சர்வதேச சப்-ஜூனியர் பேட்மிண்டன் போட்டிகளுக்கு இந்திய அணி வீரர்கள் தேர்வும் நடந்தது.
இந்த போட்டியில் ஈரோட்டை சேர்ந்த மாணவிகள் அனன்யா அருண் மற்றும் ஆதிரா ராஜ்குமார் ஆகியோர் 15 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில் தேசிய அளவில் 2-ம் தரவரிசை வீரர்களாக களம் கண்டனர். இதைத்தொடர்ந்து நடந்த இறுதி போட்டியில் உத்தரகாண்ட் அணி தங்க பதக்கத்தையும், தமிழகத்தை சேர்ந்த அனன்யா மற்றும் ஆதிரா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
மேலும் தனி நபர் போட்டியில் ஆதிரா 2 வெண்கல பதக்கமும், கலப்பு இரட்டையர் போட்டியில் அனன்யா வெண்கல பதக்கமும் என மொத்தம் 4 தேசிய பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவிகளை ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் பாராட்டினார்.