ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பால ரோட்டில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்


ஈரோடு கொல்லம்பாளையம்  ரெயில்வே நுழைவு பால ரோட்டில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
x

கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பால ரோட்டில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

ஈரோடு

கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பால ரோட்டில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

அடிக்கடி விபத்து

ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பால சாலை உள்ளது. ஈரோட்டில் இருந்து கரூர், தாராபுரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு சென்று வர இந்த ரோடு பிரதான ரோடாக உள்ளது. காளைமாட்டு சிலை பகுதியில் இருந்து செல்லும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், அதேபோல் பூந்துறை ரோடு, கரூர் ரோட்டில் இருந்து கொல்லம்பாளையம் ரவுண்டானா வழியாக வரும் கனரக வாகனங்கள், இதே ரோட்டில் அனுமதிக்கப்படுகிறது.

இந்த ரோடு குண்டும், குழியுமாக காணப்பட்டதால், மழைக்காலங்களில் ரோட்டில் மழை நீர் தேங்கி, அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. மேலும் காலை, மாலை நேரங்களில் இந்த ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

போக்குவரத்து தொடக்கம்

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் ரோட்டை மேம்படுத்துவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் நுழைவு பால ரோடு மேம்பாட்டு பணிக்காக கடந்த ஜூன் மாதம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. பழுதான கான்கிரீட் ரோட்டை உடைத்து அப்புறப்படுத்தி போதுமான சீரமைப்பு பணிகளை செய்து புதிய கான்கிரீட் ரோடு போடப்பட்டுள்ளது.

நுழைவு பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்காத வகையில் போதுமான கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து நேற்று முதல் கொல்லம்பாளையம் ரெயில்வே பால ரோட்டில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சென்று வருகின்றன.


Related Tags :
Next Story