ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகரித்ததால் விற்பனை மும்முரம்


ஈரோடு மார்க்கெட்டில்  மீன்கள் வரத்து அதிகரித்ததால் விற்பனை மும்முரம்
x

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகரித்ததால் விற்பனை மும்முரமாக காணப்பட்டது.

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகரித்ததால் விற்பனை மும்முரமாக காணப்பட்டது.

மீன் மார்க்கெட்

ஈரோடு ஸ்டோனிபாலம் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. அங்கு கடல் மீன்கள், அணை மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இருந்து வந்தபோது ஈரோட்டுக்கு மீன்கள் வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. கேரளா மாநிலத்தில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. மீன்களின் வரத்து குறைந்ததால், விலையும் உயர்ந்தது.

இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் கடந்த வாரத்தில் இருந்து மீன்களின் வரத்து அதிகரிக்க தொடங்கியது. வரத்து அதிகரிக்க தொடங்கியதால் மீன்களின் விலையும் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

விலை விவரம்

மீன் மார்க்கெட்டுக்கு நேற்று 8 டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் வஞ்சிரம் மீன் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.900-க்கு விற்பனையானது. மற்ற மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

கிளி மீன் - ரூ.450, வவ்வால் - ரூ.450, சீலா - ரூ.500, அயிலை - ரூ.250, சங்கரா - ரூ.350, மத்தி- ரூ.200, கொடுவா -ரூ.500, பெரியஇறால் - ரூ.750, சின்ன இறால் - ரூ.550, நண்டு - ரூ.500, பாறை - ரூ.450.

இதைப்போல் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் ஆர்வமாக வந்து மீன்களை வாங்கி சென்றார்கள்.


Next Story