ஈரோடு காவிரிக்கரையில்முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க திரண்ட பக்தர்கள்
ஈரோடு காவிரிக்கரையில் முன்னோர்களுக்கு திதி,கொடுக்க பக்தர்கள் திரண்டனா்.
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் மாதந்தோறும் அமாவாசை அன்று பக்தர்கள் பலர் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். குறிப்பாக மகாளய அமாவாசை அன்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆற்றில் பக்தர்கள் புனிதநீராடிவிட்டு கரையோரம் உள்ள சோழீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வார்கள்.
இந்தநிலையில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதற்காக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரைக்கு வந்தனர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் வரத்தொடங்கினர். அங்கு பக்தர்களை புரோகிதர்கள் வரிசையாக உட்கார வைத்தனர். இலையில் பிண்டங்கள் வைத்து முன்னோர்களுக்கு பக்தர்கள் திதி கொடுத்தனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் இறங்கி பிண்டங்களை தண்ணீரில் கரைத்து புனித நீராடினார்கள்.
Related Tags :
Next Story