ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் சிக்னல் அகற்றம்:டி.வி.எஸ். வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்


ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் சிக்னல் அகற்றம்:டி.வி.எஸ். வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்
x

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் இருந்த சிக்னல் அகற்றப்பட்டதுடன், டி.வி.எஸ். வீதி நேற்று முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

ஈரோடு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் இருந்த சிக்னல் அகற்றப்பட்டதுடன், டி.வி.எஸ். வீதி நேற்று முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

ஒரு வழிப்பாதை

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் உள்ள ரோட்டில், நெடுஞ்சாலை துறை சார்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. நகரின் முக்கியமான வியாபார பகுதியாக உள்ள இந்த பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பாக ரோட்டை எளிதில் கடந்து செல்லும் வகையில் சோதனை அடிப்படையில் வாகன போக்குவரத்தை தற்காலிகமாக மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட போலீஸ் துறையும் முடிவு செய்துள்ளது.

அதன்படி, பன்னீர் செல்வம் பூங்கா சிக்னலில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் டி.வி.எஸ். வீதி (திருவேங்கட சாமி வீதி) ஒரு வழிப்பாதையாக நேற்று முதல் மாற்றப்பட்டு உள்ளது. இதனால் பன்னீர் செல்வம் பூங்கா சிக்னலில் இருந்து டி.வி.எஸ். வீதியில் வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கிருந்து வாகனங்கள் எதுவும் வரக்கூடாது. இதன் காரணமாக பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிக்னல் நேற்று அகற்றப்பட்டது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

எனவே, டி.வி.எஸ். வீதியில் இருந்து பன்னீர் செல்வம் பூங்கா சிக்னல் வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக, காமராஜர் வீதியை அடைந்து, மீண்டும் மீனாட்சி சுந்தரனார் ரோட்டுக்கு வரலாம். அல்லது ஈஸ்வரன் கோவில் வீதியில் இருந்து மணிக்கூண்டு சந்திப்பை கடந்து, டவுன் போலீஸ் நிலையம் வழியாக, பெரியார் மன்றம் சந்திப்பு வந்து அங்கிருந்து பன்னீர்செல்வம் பூங்கா பகுதிக்கு செல்லலாம்.

மற்ற ரோடுகளில் எவ்வித மாற்றமும் இன்றி பொதுமக்கள் பயணிக்கலாம். சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story