ஈரோட்டில் 19 மி.மீட்டர் மழை பதிவு அணைக்கட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது


ஈரோட்டில் 19 மி.மீட்டர் மழை பதிவு  அணைக்கட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
x

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை நேரத்தில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவிலும் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால் ஈரோடு பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பள்ளம் ஓடையில் நீர் வரத்து அதிகரித்ததால் சூரம்பட்டி அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஈரோட்டில் 19 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதுபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

பவானி - 12.60

அம்மாபேட்டை - 11.60

சென்னிமலை - 9.40

வரட்டுப்பள்ளம் - 9.20

மொடக்குறிச்சி - 9

கொடுமுடி - 7.20

கொடிவேரி - 4

தாளவாடி - 2

மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி உள்ளது.


Next Story