ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் லாரி சக்கரம் பதிந்து குழாயில் உடைப்பு; ஆறாக ஓடிய குடிநீர்


ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில்  லாரி சக்கரம் பதிந்து குழாயில் உடைப்பு;  ஆறாக ஓடிய குடிநீர்
x

லாரி சக்கரம் பதிந்து குழாயில் உடைப்பு;

ஈரோடு

ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட பணிகள் நடந்தன. அப்போது சாலை தோண்டப்பட்டு மேடு பள்ளமானது. பின்னர் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பின்னர் தார் சாலை போடப்பட்டது. இந்தநிலையில் ஆர்.கே.வி. ரோடு கருங்கல்பாளையம் மீன் சந்தை அருகே நேற்று காலை ஜல்லி பாரம் ஏற்றிய மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக ரோட்டின் ஒரு பகுதியில் மினி லாரியின் சக்கரம் பதிந்தது. அந்த இடத்தில் இருந்து குடிநீர் பீறிட்டு பாய்ந்து ரோட்டில் ஆறாக ஓடியது. சாலை போட்டபோது குடிநீர் குழாய் சரியான பாதுகாப்புடன் பதிக்கப்படாததால் அந்த இடத்தில் குழாய் உடைந்து தண்ணீர் கசிவுடன் இருந்திருக்கிறது. மினி லாரி சக்கரம் ஏறியதும் சாலை புதைந்து தண்ணீர் குழாயில் பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.

இதனால் அங்கு வேறு வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டு தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, 'ஒவ்வொரு பணியும் ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்யப்படுகிறது. அவர்கள் சரியாக பணியை செய்யாமல் விடுவதால் பொதுமக்களுக்கு சிரமமும், அரசுக்கு இழப்பும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Next Story