பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி


பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
x
தினத்தந்தி 12 Oct 2023 6:15 AM IST (Updated: 12 Oct 2023 6:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி அரசு அருங்காட்சியகம் சார்பில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்

பழனி அரசு அருங்காட்சியகம் சார்பில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கட்டுரை போட்டி நடைபெற்றது.அருங்காட்சியக வளாகத்தில் நடந்த இந்த போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். 6 முதல் 8-ம் வகுப்பு மற்றும் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த போட்டி நடத்தப்பட்டது.

பின்னர் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் பழனி கல்வி மாவட்ட அலுவலர் பரிமளா கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் தலைமையிலான பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story