திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி கலெக்டர் கார்மேகம் தகவல்


திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி  கலெக்டர் கார்மேகம் தகவல்
x

திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி நடத்தப்பட உள்ளது கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம்,

ஆலோசனை கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திடக்கழிவு மேலாண்மை குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுகாதாரமான வாழ்க்கைக்கு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

தூய்மைப்படுத்தும் முகாம்கள்

குப்பைகளை தரம் வாரியாக பிரித்து வெளியேற்றுவதில் உரிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பஸ் நிலையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மத வழிபாட்டுத்தலங்கள், ெரயில் நிலையங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு தூய்மைப்படுத்தும் முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு போட்டிகள்

மாணவ, மாணவிகளிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கட்டுரை போட்டிகள், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மேலும், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வாக சைக்கிள் பயணம், மாரத்தான் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் இதர திடக்கழிவுகளை தன்னார்வலர்களை கொண்டு அவ்வப்போது தூய்மைப்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் குப்பைகள் அற்ற மாவட்டம் என்ற நிலையை ஏற்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் திட்ட இயக்குனர் செல்வம், உதவி கலெக்டர்கள் விஷ்ணுவர்த்தினி, சரண்யா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story